நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. தொடங்கியுள்ளது.
ஓய்வூதியம் தொடர்பான மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் பிஸியாக உள்ள நிலையில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையிலும், தொகுதிப் பங்கீட்டிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து, தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை இறுதிச் செய்வதில் அ.தி.மு.க. மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ்!
அதேபோல், தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் எதிர்பார்ப்புகள் குறித்து அ.தி.மு.க. தேர்தல் பங்கீடு குழு நிர்வாகிகள் கேட்டறிந்தனர். அ.தி.மு.க. தலைமையில் மாபெரும் கூட்டணி அமையவிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.