முன்னாள் அதிமுக தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் தேர்தல் வியூக வல்லுநருமான ஆஸ்பெயர் கே சுவாமிநாதன் விமானத்தில் பயணிக்கும் போது சென்னை காவல்துறை சாதுரியமாக செயின் பறிப்பு கொள்ளையனை கைது செய்த அனுபவத்தை வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொடர்ந்து 6 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களை நிகழ்த்தி விட்டு வட மாநில கொள்ளையர்கள் இருவர் விமானம் மூலம் ஹைதராபாத் மற்றும் மும்பை தப்பிச் செல்ல முயன்றனர். தகவல் அறிந்த சில மணி நேரத்திலேயே தனிப்படைகளை அமைத்து 130 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விமான மூலம் தப்பிக்க முயன்ற இரண்டு செயின் பறிப்பு கொள்ளையர்களையும் அதிரடியாக கைது செய்தனர்.
சினிமா பாணியில் தனிப்படைகள் தீவிரமாக செயல்பட்டு செயின் பறிப்பு கொள்ளையர்கள் காலணியை வைத்து விமானம் மூலம் தப்பிக்க முயல்வதை கண்டுபிடித்தனர்.பறப்பதற்கு தயாராக இருந்த விமானத்தில் பயணிகளுக்கு எந்தவித பதட்டத்தையும் ஏற்படுத்தாமல் சாதுர்யமாக செயின் பறிப்பு கொள்ளையனை கைது செய்தனர். குறிப்பாக கைது நடவடிக்கை மேற்கொண்ட மீனம்பாக்கம் காவல் ஆய்வாளர் பாண்டியன் மற்றும் அவரது காவல் குழுவினருக்கு சென்னை காவல்துறை ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
குறிப்பாக ஹைதராபாத் செல்லும் விமானத்தில் தப்பிச்செல்ல முயன்ற செயின் பறிப்பு கொள்ளையனை விமானத்தில் புகுந்து சென்னை காவல் துறையினர் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சக பயணிகள் பதட்டமடையாமல் கைது செய்த விதத்தை நேரில் பார்த்த முன்னால் அதிமுக தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர்,மற்றும் தேர்தல் வியூக வல்லுநருமான ஆஸ்பயர் கே சுவாமிநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஹைதராபாத்திற்கு விமானத்தின் மூலம் செல்வதற்கு உள்ளே அமர்ந்திருக்கும் போது ,சென்னை காவல்துறையினர் விமானத்திற்குள் நுழைந்து டிப் டாப் ஆக அமர்ந்திருந்த செயின் பறிப்பு கொள்ளையனை கைது செய்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் செயின் பறிப்பு கொள்ளையனைத் பல்வேறு நாடகங்களுக்கு மத்தியில் கைது செய்துள்ளார்கள் என்பது பற்றி செய்தி வெளியான பிறகு தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார். காவல்துறையின் இந்த நடவடிக்கையை பாராட்டியதோடு மட்டுமல்லாது இது போன்ற செயல்களால் தாங்கள் பாதுகாப்பாக உணர்வதாகவும் பெருமையாக இருப்பதாகவும் கூறி சமூக வலைதளத்தில் முதல்வர் சமூக வலைதள பக்கத்தை இணைத்து சென்னை காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். விமானத்திற்குள் இந்த அனுபவத்தை தன்னால் மறக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். சென்னை காவல்துறைக்கு கிடைத்த இந்த பாராட்டு வைரலாக பரவி வருகிறது. மேலும் சமூக வலைதளத்தில் சென்னை காவல் துறை தரப்பில் நன்றி தெரிவித்து பதிவையும் வெளியிட்டுள்ளனர்.
ஒத்த கருத்தோடு இருக்கக்கூடிய கட்சிகளை எல்லாம் எங்களுடன் இணைத்துக் கொள்வோம் – எடப்பாடி பழனிசாமி