விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு மாம்பழப்பட்டில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையினரும் மத்திய ரிசர்வ் போலீசாரும் விழுப்புரம் மாவட்ட போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்
இடைத்தேர்தல் பாதுகாப்பாக நடைபெற விக்கிரவாண்டி தொகுதிக்கு மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையினரும் மத்திய ரிசர்வ் போலீசாரும் வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில் வாக்காளர்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாக்களிக்க வலியுறுத்தி மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையை சார்ந்த 15 பேரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சார்ந்த 54 பேரும், விழுப்புரம் காவல் துறை சார்ந்த 35 பேர் என மொத்தமாக 100 பேர் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
கொடி அணிவகுப்பானது டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் மாம்பழப்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று மல்லிகைப்பட்டு சாலையில் நிறைவு பெற்றது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 275 வாக்கு சாவடிகள் உள்ளதில், 75 பதற்றமான வாக்குசாவடிகள் உள்ளன.