வேதாரண்யம் அருகே பைக் ரேஸில் ஈடுபட்ட 4 இளைஞர்களை போலீசார் பிடித்து மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பகுதியில் நான்கு இளைஞர்கள் பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபடுவதாக தொலைபேசி வாயிலாக நாகை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் சென்றது. உடனடியாக வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கோடியக்கரை பகுதியை சேர்ந்த முஹமதுகைப் (21), முஹமதுஹல்பான் (22) ,அப்துல்கலாம் (20) ,வாசிம்அகமது (23) ஆகிய நான்கு இளைஞர்களும் அதிவேகமாக சாலையில் பைக்கை இயக்கி பைக் ரேஸில் ஈடுபட்டு அந்த காட்சியை சமூக வலைத்தளங்களில் பரப்பியது தெரிய வந்தது. இதனை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை செய்தனர்.
பின்னர் இந்த 4 பேரையும் வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இனிமேல் இதுபோன்ற பைக் சாகசத்தில் ஈடுபட மாட்டோம் என உறுதி அளித்து இளைஞர்கள் மன்னிப்பு கேட்டனர். நான்கு பேரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
நான்கு இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டு மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.