Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக தலைமையிலான கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு!

திமுக தலைமையிலான கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு!

-

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கட்சி – ஆதித்தமிழர் பேரவை, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. அதன்படி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, ஆரணி, தென்காசி, தஞ்சாவூர் ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிடவுள்ளது. 21 தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை வெளியிடவுள்ளார்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கட்சி – ஆதித்தமிழர் பேரவை, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மனிதநேய மக்கள் கட்சி – ஆதித்தமிழர் பேரவை, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி – சமத்துவ மக்கள் கழகம் – மனிதநேய ஜனநாயகக் கட்சி – மக்கள் விடுதலை கட்சி – தமிழ் புலிகள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

 

MUST READ