கும்கி யானை கலீமுக்கு ஓய்வு
தமிழ்நாட்டில் பல்வேறு கும்கி ஆப்ரேஷன்களில் செயல்பட்டு வெற்றி பெற்ற கும்கி யானை கலீமுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது
60 வயது பூர்த்தி அடைந்த கலீமுக்கு வனத்துறை மரியாதை
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் அருகே கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் 26 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், கோழிகமுத்தி முகாமில் உள்ள கலீம் என்ற கும்கி யானை கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் காட்டு யானைகளை பிடிக்கும் ஆபரேஷன்களில் பங்கெடுத்துள்ளது. 60 வயது பூர்த்தி அடைந்த கும்கி யானை கலீமுக்கு வனத்துறையினர் மரியாதை செலுத்தி வழி அனுப்பி வைத்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அதிகாரிகள் திரண்டு மரியாதை
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹீ மற்றும் வனத்துறை முதன்மை தலைமை பாதுகாவலர் சீனிவாச ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.