கம் ஆன் பேபி லெட்ஸ்கோ ஆன் த புல்லட்டு, பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாடலுக்கு நடனமாடி பொங்கல் வைத்து கொண்டாடிய பெண்கள். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சமத்துவ மக்கள் கழகத் தலைவர் ஏர்ணாவூர் நாராயண் வழங்கினர்.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 14 தேதி தமிழக முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சமத்துவ மக்கள் கழகம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் குத்தாட்டம் போட்டு முளைப்பாரி ஏந்தி நாராயணனை வரவேற்றனர்
பின்னர் புதுப்பானையில் பொங்கல் வைத்தனர் சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏர்ணாவூர் நாராயணன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு பூஜைகள் செய்து வழிபட்டு பொங்கலோ பொங்கல் என்று கூறி முழக்கமிட்டனர். இதனையடுத்து கிராமிய பொங்கலை கொண்டாட விதமாக பொங்கல் பானை அருகே முளைப்பாரி வைத்து பெண்கள் கிராமிய பாடலை பாடி கும்மி அடித்து ஆடினர்.
இதனை அடுத்து பெண்கள் ,கம் ஆன் பேபி லெட்ஸ்கோ ஆன் த புல்லட்டு ஆன்தவே ல பாடிக்கலாம் டூயட்டு மற்றும் பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும் என்ற பாடலும் நடனமாடினர். பொங்கல் விழாவை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பொங்கல் பரிசுகளை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் வழங்கினார்.
உண்மையில் சீமானுக்கு நாட்டுடைமை ஆக்குவது என்பது என்னவென்று தெரியுமா? திருமுருகன் காந்தி கேள்வி!