பொங்கல் பண்டிகை – நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கடைசி நேர நெருக்கடியை தவிர்க்குமாறு ரயில்வே அறிவித்தியுள்ளது.
இந்நிலையில் ஜனவரி 11 ஆம் தேதிக்கு நாளையும், 12 ஆம் தேதிக்கு நாளை மறுநாளும், 13 ஆம் தேதிக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். இதேபோல் ஜனவரி 11 முதல் 17 ஆம் தேதிவரை ரயிலில் பயணாம் செய்ய செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 19 ஆம் தேதிவரை முன்பதிவு செய்துகொள்ளலாம். ஐஆர்சிடிசி இணையத்திலும் டிக்கெட் கவுண்டர்களிலும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என ரயில்வே அறிவித்துள்ளது. நாளை காலை 8 மணிக்கு ஐஆர்டிசி இணையத்தளத்தில் முன்பதிவு தொடங்கும் என்பது குறிப்பிடதக்கது.
முன்னதாக வரும் நவம்பர் 12- ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்கு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவை இந்திய ரயில்வே ஜூலை 12 காலை 08.00 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது.