அமைச்சர் பொன்முடியை விடுவித்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் நிலைப்பாடு என்ன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆளுநரின் செயலாளர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.36 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்த நிலையில், அமைச்சர் உள்பட அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது. அந்த வகையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (நவ.10) நடைபெற்றது.
அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன், சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுவித்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினார்.
ஒரே நாளில் 1.36 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்!
அப்போது ஆஜரான தமிழக அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், “லஞ்ச ஒழிப்புத்துறையின் நிலைப்பாடு குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்கிறேன். பொன்முடி விடுவிக்கப்பட்ட வேலூர் நீதிமன்றத் தீர்ப்பை ஆய்வுச் செய்து வருகிறோம்” என்றார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 27- ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.