Homeசெய்திகள்தமிழ்நாடுமின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட பொறியாளரை கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை!

மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட பொறியாளரை கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை!

-

- Advertisement -

 

மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட பொறியாளரை கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, கோவில் பதாகை, பழைய அக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 62). இவரின் இளைய சகோதரர் ஜெயபாலன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட வணிக மின் இணைப்பை வீட்டு மின் இணைப்பாக மாற்ற ஆவடி கோவில் பதாகை மின்சார வாரியத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதைப் பரிசீலித்த மின் வணிக உதவி பொறியாளர் மரியதாஸ், இதற்கு ரூபாய் 3,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத சுலோச்சனா, இது குறித்து திருவள்ளூர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, மரியதாஸ் அலுவலகத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், மரியதாஸ் அவர்களிடம் லஞ்ச பணம் பெற்ற போது, கையும் களவுமாகப் பிடித்தனர். அவரை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட பொறியாளரை கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை!

பேருந்தின் பின் இருக்கை பலகை உடைந்து விழுந்ததில் பெண் பயணிக்கு காயம்!

ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அதிகாரிகளே, லஞ்சம் பெறுவது சக நல்ல அதிகாரிகளையும் தலைகுனிய செய்துள்ளது என்றால் மிகையாகாது.

MUST READ