தமிழ்நாட்டில் நேற்று உச்சபட்சமாக 17,705 மெகாவாட் மின் நுகர்வு: செந்தில் பாலாஜி தகவல்
தமிழ்நாட்டில் அனல் மின் நிலையம், அணு மின் நிலையம், புனல் மின் நிலையம், காற்றாலை, சூரியசக்தி என பல்வேறு வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
அன்றாட தேவைக்கு ஏற்ப மின்சாரம் உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் நேற்று மின் நுகர்வு 17,705 மெகாவாட்டாக அதிகரித்தது.
இந்த 17,705 மெகாவாட் மின்சாரம் எந்தவித மின்தடையுமின்றி வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக பெருமிதமாக தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முன்பு கடந்த 10ஆம் தேதி 17,647 மெகாவாட் மின் நுகர்வு ஒரு நாளின் அதிகபட்ச மின் நுகர்வாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மின் வாரியத்தில் ஊழியர்கள் வீடுகளில் மின் உபயோகத்தை Electricity consumption கணக்கெடுக்காமல் அலுவலகத்தில் இருந்து கொண்டே மின் இணைப்பை (DC) துண்டித்து பொதுமக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதை அமைச்சர் செந்தில்பாலாஜி கண்டுக்கொள்வதில்லை.
அதேபோல் மின் வாரியத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதையும் கண்டுக்கொள்ளாமல் பெருமிதம் அடைந்து என்ன பயன் என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.