மின் விநியோகம்- தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு பாராட்டு
தமிழ்நாட்டில் தேசிய சராசரியைவிட அதிகமாக நாளொன்றுக்கு 22.15 மணிநேரம் ஊரகப் பகுதிகளில் மின்சாரம் விநியோகிப்பதற்கு ஒன்றிய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய அளவில் 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில், 2021-2022 ஆம் ஆண்டில், அது நாளொன்றுக்கு 20 மணி நேரம் 53 நிமிடங்களாக இருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோகம், 2021-2022 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளது. இதற்கு பாராட்டுக்கள்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட ஏதுவாக, 24 மணி நேரமும் மின் விநியோகத்தினை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒன்றிய அரசு உதவிடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.