முதல்வர், பிரதமர் வாழ்த்தியதில் மகிழ்ச்சி: பிரக்ஞானந்தா பேட்டி
செஸ் உலக்கோப்பை இறுதிப்போட்டியில் தொல்வியடைந்தாலும், கேன்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.
அஜர்பைஜானில் நடைபெற்ற ஃபிடே சதுரங்க உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா, இறுதிவரை போராடி நார்வே வீரர் கார்ல்சனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் உலக்கோப்பை செஸ் தொடர் குறித்து பேசிய பிரக்ஞானந்தா, “உலகக்கோப்பை செஸ் தொடர் இறுதிப்போட்டி கார்ல்சனுடனான ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் கேன்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு விளையாடி தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இறுதிப்போட்டி டை பிரேக்கர், முதல் சுற்றில் கார்ல்சன் உடனான போட்டியில் தோல்வியடைந்தேன், இரண்டாம் சுற்றில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விஸ்வநாதன் ஆனந்த் என ஏராளமானோர் வாழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது.
உலகக்கோப்பை செஸ் தொடரை பின் தொடர்ந்து இதன் மூலம் செஸ் விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது அடுத்தடுத்து தொடர்ந்து செஸ் போட்டிகள் உள்ளது. 3 மாதத்திற்கு பிறகு கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தயாராவேன். ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் எனது சிறந்த ஆட்டத்தை அளித்தது சந்தோசமாக உள்ளது” என்றார்.