சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு விளையாட்டுத் துறைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அரசு உயரதிகாரிகள், வீரர்கள் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.
செந்தில்பாலாஜி ஜாமீன் மனு- ஐகோர்ட்டை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுரை
மலர்களைத் தூவியும், மலர் கிரீடம் அணிவித்தும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளம் முழங்க திறந்தவெளி வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட பிரக்ஞானந்தாவுக்கு, வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செப்டம்பர் முதல் சுங்கக்கட்டணம் உயர்வு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்
உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முதலமைச்சர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.