Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை- அரசாணை வெளியீடு

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை- அரசாணை வெளியீடு

-

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை- அரசாணை வெளியீடு

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

tn assembly

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது. கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2010-2011 ஆம் கல்வியாண்டு முதல் இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்திலிருந்து ஒற்றைச்சாளர முறையில் தொழிற்கல்வி பயில தேர்வு பெற்ற மாணவர்களுக்கு சாதிப் பாகுபாடின்றியும், வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் அம்மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் முழுவதையும் சில நிபந்தனைகளுடன் அரசே ஏற்று ஆணையிட்டுள்ளது. வேலை வாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்றன அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் மற்றும் தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்காக இவ்வரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி, முன்னுரிமை பெற்றுள்ள பிரிவினராக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதற்கும், முன்னுரிமை முறை பின்பற்றப்படும் பணியாளர் தெரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் பொருட்டும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை சான்றிதழ்கோரி விண்ணப்பிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ் வழங்கிடும் வகையில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தேவையான ஆணைகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்க மனிதவள மேலாண்மைத்துறை கேட்டு கொண்டுள்ளது.

MUST READ