தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இரண்டு நாள் பயணமாக நேற்று (ஆகஸ்ட் 05) இரவு 07.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்தார். அப்போது குடியரசுத் தலைவருக்கு பொன்னாடையும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தையும் வழங்கி வரவேற்றார்.
ராகுல் காந்தி விவகாரத்தில் அரசின் முடிவு எப்படி இருக்கும்? ஏற்கனவே வசித்த அரசு பங்களா தரப்படுமா?
அதேபோல், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், மாநகராட்சி மேயர் பிரியா, அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.