திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலால் இருவர் பாதிக்கப்பட்டு, வீடு திரும்பிய நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வீடு, வீடாகச் சென்று கொசு, புழு கண்டறிதல், அழித்தல் மற்றும் கொசு மருந்துத் தெளிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சுகாதாரத்துறை சார்பில், டெங்கு கொசு உருவாகாமல் தடுப்பது காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவைக் குறித்தும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆவடி பட்டாபிராம் இரயில் நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை திறப்பு : பொது மக்கள் மகிழ்ச்சி
அதேபோல், வீடுகளையும், வீட்டைச் சுற்றியுள்ள வெளிப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க பொதுமக்களை அறிவுறுத்தியுள்ள சுகாதார ஊழியர்கள், தண்ணீரை தேங்காமல் பார்த்துக் கொள்ளவும், தண்ணீரைக் காய்ச்சிப் பருக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.