Homeசெய்திகள்தமிழ்நாடுதொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையின் நீட்டிப்பு!

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையின் நீட்டிப்பு!

-

- Advertisement -

 

தமிழகத்தில் 6 முதல் 12- ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு!
File Photo

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான பருவத்தேர்வு விடுமுறை முடிவடைந்து, வரும் அக்டோபர் 03- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. இந்த நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் விடுமுறை நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 28- ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 08- ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 09- ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழைக் காரணமாக, தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்!

அதே நேரத்தில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 03- ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படத் தொடங்கும் எனவும்த் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு வரும் அக்டோபர் 03- ஆம் தேதி முதல் அக்டோபர் 06- ஆம் தேதி வரை பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ