Homeசெய்திகள்தமிழ்நாடுகடன் தொல்லையால் தனியார் நிறுவன மேலாளர் தூக்கிட்டு தற்கொலை!

கடன் தொல்லையால் தனியார் நிறுவன மேலாளர் தூக்கிட்டு தற்கொலை!

-

- Advertisement -

சென்னை அருகே கடன் தொல்லை காரணமாக தனியார் நிறுவன மேலாளர் உயர் அழுத்த மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த ரகேஷ் என்பவருக்கு மோனிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளன. அதில், 9 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ராகேஷ் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வந்தார். ராகேஷ் குடும்ப சூழ்நிலை காரணமாக அதிகளவில் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. கடன் தொல்லை காரணமாக வீட்டில் அவருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உலைச்சலுக்கு ஆளான ராகேஷ் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே மன்னூர் என்ற பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சனை தான் காரணமா? அல்லது வேறு ஏதும் பிரச்சனை உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ