சென்னையில் சிறையில் இருந்து பிணையில் வந்து பிறகு தலைமறைவாகிய கூலிப்படையைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திரபாபுவை நியமித்ததை நிராகரித்த ஆளுநர்!
பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர், கடந்த 2022- ஆம் ஆண்டு நிதி நிறுவனத்தின் உரிமையாளர் ஆறுமுகம் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நிபந்தனை பிணையில் வெளி வந்த அவர், கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்தார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவரை அமைந்தகரை காவல்துறையினர், தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
“ஆசிரியர் பணி வயது வரம்பு உயர்வு வரவேற்கத்தக்கது”- டாக்டர் ராமதாஸ் ட்வீட்!
பொன்னேரி சிறைச்சாலையில் சுற்றி வந்த அவரை, தனிப்படைக் காவல்துறையினர் பதுங்கியிருந்து கைது செய்தனர். ஆறுமுகம் கொலை வழக்கு தொடர்பாக, ரோஹித் ராஜை மீண்டும் கைது செய்து அமைந்தகரை காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.