Homeசெய்திகள்தமிழ்நாடுதனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

-

 

தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தனியார் பள்ளி வாகனங்களில் உதவியாளர்களால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், பாதுகாப்புத் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

“ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு”- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி!

அதில், அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என்றும், மாணவிகள் செல்லும் வாகனங்களில் கட்டாயம் ஒரு பெண் உதவியாளர் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி வாகன ஓட்டுநர், உதவியாளர் மீது குற்ற நடவடிக்கை எதுவும் இல்லை என்ற காவல்துறையினரின் சான்று சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக மாணவர்களை ஏற்றக் கூடாது என்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் குழந்தைகளை ஒப்படைத்த பிறகே வாகனத்தை இயக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கு பெண் ஆசிரியர்களைக் கொண்டு கூட்டம் நடத்தி பாலியல் தொல்லை, வாகனத்தை இயக்கும்போது, ஓட்டுநர் செல்போனில் பேசுவது உள்ளிட்டவைக் குறித்து கேட்கப்பட்டு தீர்வுக் காண வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் வீட்டில் தங்க நகைகளைத் திருடிய மாணவர் கைது!

அதேபோல், தனியார் பள்ளி வாகனங்கள் குறித்த விவரங்களை கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். பள்ளி வாகன ஓட்டுநர்கள், உதவியாளர்கள் விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில் பதிவுச் செய்ய வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

MUST READ