Homeசெய்திகள்தமிழ்நாடுஅமித்ஷாவை கண்டித்து வரும் 28ம் தேதி சென்னையில் அறப்போராட்டம் - தொல். திருமாவளவன்

அமித்ஷாவை கண்டித்து வரும் 28ம் தேதி சென்னையில் அறப்போராட்டம் – தொல். திருமாவளவன்

-

- Advertisement -

அமித்ஷாவை கண்டித்து வரும் 28ம் தேதி சென்னையில் ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.அமித்ஷாவை கண்டித்து வரும் 28ம் தேதி சென்னையில் அறப்போராட்டம் - தொல். திருமாவளவன்தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகிய மகத்தான தலைவர்கள் முன்னெடுத்த அரசியல், சமூக நீதி இந்த மண்ணில் சமத்துவத்தை நிலை நாட்ட, அவர்கள் உயர்த்தி பிடித்த சமூக நீதி கோட்பாட்டை பாதுகாக்க பெரியார் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.

வரும் 28ம் தேதி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் அறப்போராட்டத்தை நடத்த உள்ளோம். உள்துறை அமைச்சர் அமித்ஷா புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரை உச்சரிப்பது வீணான வேலை என்றும், பகவான் பெயரை உச்சரித்தால் ஏழு பிறவிக்கு புண்ணியம் கிடைக்கும் என்று அவர் சொல்லி இருப்பது அம்பேத்கரை அவமதிக்கும் செயல்.

இதனை கண்டித்து தேசிய அளவில் அம்பேத்கர் இயக்கங்கள், பௌத்த இயக்கங்கள் 28ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். தமிழகத்தில் அந்த போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் முன்னெடுக்கிறது. நாடாளுமன்றத்திற்கு சென்றால் அம்பேத்கரின் பெயரை உச்சரிக்க வேண்டும் என்பதுதான் காலத்தின் கட்டளை. அதை ஏற்றுக் கொள்ள முடியாத பாஜகவை சார்ந்தவர்கள் எரிச்சல் அடைகிறார்கள். தேசிய அளவில் சமூக நீதியை பாதுகாக்க முன் வர வேண்டும்.

சமூக நிதியையும், அரசமைப்பு சட்டத்தை காப்பாற்றுவோம் என்று பெரியாரின் நினைவு நாளில் உறுதி ஏற்போம். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த நினைக்கும் பாஜக, அதன் பெயரில் இந்தியை கட்டாயமாகக் திணிக்க பார்க்கிறது. தமிழகத்தில் பெரியார் கொள்கைகள் கைவிடப்படுவதாக கே. பாலகிருஷ்ணன் கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு, அது அவரின் தனிப்பட்ட கருத்து. அதற்கு திராவிட இயக்கங்கள் தான் பதில் சொல்ல வேண்டும், என தெரிவித்தார்.

திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு இந்த கைத்தடி போதும்- முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

MUST READ