மழைநீரை அகற்றுவதில் நடவடிக்கை எடுக்காத புகாரில் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் வெளியான கவினின் ‘ஸ்டார்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!
சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, சென்னீர்குப்பம், பாரிவாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த ஒன்பது நாட்களாக மழைநீர் வடியவில்லை. இது குறித்து செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது. அதில். மழைநீர் இன்னும் வடியாத நிலையில், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, நசரத்பேட்டை யமுனா நகரில் வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 110 ஹெச்.பி. திறன் கொண்ட இரண்டு மிதவை மோட்டார்கள் நெய்வேலியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. மிதவை மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றினால் இரண்டு நாட்களின் வற்றி விடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, மழைநீரை அகற்றுவதில் நடவடிக்கை எடுக்காதப் புகாரில், பூந்தமல்லி பி.டி.ஓ. ஸ்டாலினை திருத்தணிக்கு பணியிட மாற்றம் செய்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு நடவடிக்கை எடுத்துள்ளார்.