Homeசெய்திகள்தமிழ்நாடுகுரூப் 4- ஒரே மையத்தில் 615 பேர் தேர்ச்சி குறித்து அதிகாரியிடம் விளக்கம் கேட்பு

குரூப் 4- ஒரே மையத்தில் 615 பேர் தேர்ச்சி குறித்து அதிகாரியிடம் விளக்கம் கேட்பு

-

குரூப் 4- ஒரே மையத்தில் 615 பேர் தேர்ச்சி குறித்து அதிகாரியிடம் விளக்கம் கேட்பு

நில அளவையர், வரைவாளர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கு சுமார் 1338 பேர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) போட்டித் தேர்வில் சுமார் 29,882 பேர் பங்கேற்றனர். கடந்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது.

ptr

இதையடுத்து கவுன்சிலிங் முடிந்து டிஎன்பிஎஸ்சி இறுதி பட்டியலை வெளியிட்டபோது, காரைக்குடி நடுவத்தில் அமைக்கப்பட்ட மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது தெரிய வந்தது. அங்குள்ள ஒரு பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் வரிசையாக ஒருவருக்கு பின் ஒருவர் தேர்வாகி உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தனை நபர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. பல தேர்வர்களும், அரசியல் அமைப்பினரும் தங்களது சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் விளக்கம் அளித்தார். அப்போது, பயிற்சி மையத்தை நடத்தும் ஒருவர்தான் தனது மையத்தில் பயின்ற 2,000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்துள்ளார். தட்டச்சர் பணிக்கான தேர்வு எழுதியர்களில் தொழில்நுட்ப தகுதி அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 615 பேர் தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் இதுபோன்ற தேர்ச்சி உள்ளதா என ஒப்பிட்டு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள கடந்த ஆண்டே குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது. 7,000 காலி பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். 24 லட்சம் பேர் தேர்வு எழுத 100 கோடி தாள்களை அச்சிட வேண்டியிருந்தது.

MUST READ