பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ- மனு தள்ளுபடி
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்றை சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், ஒரே வருடத்தில் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் அவர்களின் மூதாதையரை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். அந்த பணத்தை எங்கு, எப்படி பதுக்குவது என்பது அவர்களின் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. இங்கிலாந்தில் 2 நிறுவனங்களை சபரீசன் தொடங்கியுள்ளார். முறைகேடாக சுருட்டிய பணத்தை முதலீடு செய்வதற்காகவே இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன என பேசியிருந்தார்.

இந்த ஆடியோ குறித்து ஒன்றிய அரசு விசாரணை நடத்தக்கோரிய கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரானேஷ் ராஜமாணிக்கம் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பொது நல வழக்கை விசாரணைக்கு ஏற்க மறித்து தள்ளிபடி செய்தது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறிய தலைமை நீதிபதி, ஆடியோ மீது நடவடிக்கை எடுப்பதற்கான என்ன ஆதாரம் உள்ளது எனக் கேள்வி எழுப்பினார். முற்றிலும் அபத்தமான, Bogus மனு என்றும் நீதிபதி காட்டமாக கூறினார். தெருவில் போவோர் பேசிய செய்தியை அடிப்படையாக கொண்டு மோசடியான மனுதாக்கல் செய்வதா?, உறுதி செய்யப்படாத ஆடியோவை வைத்து உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக்குவதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, அரசியல் காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தாதீர்கள் என எச்சரித்தார்.