நான்கு வழிச்சாலை எனக் கூறி 2 வழிச்சாலையிலேயே தேசிய நெடுஞ்சாலைத் துறை அங்கு டோல்கேட்டை அமைத்து கட்டணம் வசூலிக்க முயன்றதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு டோல்கேட்டை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் அருகே 4 வழிச்சாலை அமைப்பதாக கூறி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஆனால், 4 வழிச்சாலைக்கு பதிலாக வெறும் 2 வழிச்சாலையே அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத் துறை அங்கு இன்று டோல்கேட்டை அமைத்து கட்டணம் வசூலிக்க முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் திரண்டனர். நிலைகளை விட்ட மக்களுக்கு எந்த இழப்பீடும் வழங்காமல், குறைந்த பாதையில் டோல்கேட் அமைத்ததைக் கண்டித்து, அவர்கள் டோல்கேட்டை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று நிலைமை சமாதானப்படுத்த முயன்றனர். இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சதியால் வீழ்ந்த பட்நாயக்! ஸ்டாலினிடம் எடுபடுமா பாஜகவின் தந்திரம்?