புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க ஏராளமானோர் திரண்டனர
புரட்டாசி மாதத்தையொட்டி கடந்த ஒரு மாத காலமாக பலர் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் மேற்கொண்டு வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் புரட்டாசி மாதம் நிறைவு பெற்றது. புரட்டாசி முடிந்து தொடங்கும் முதல் ஞாயிற்றுக் கிழமையான இன்று காசிமேட்டில் மீன்களை வாங்க அதிகாலை முதலே அசைவ பிரியர்கள் ஆர்வமுடன் வந்தனர்.
அதிகாலை 2 மணிஅளவில் ஏல முறையில் தொடங்கும் வியாபாரத்தில் பொதுமக்கள் வியாபாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது மழை பெய்த நிலையில், அதனை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கிச் சென்றனர். இதனால் மீன்களின் விலை உயர்ந்து விற்பனையானது.
வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1000, சங்கரா கிலோ ரூ.500 முதல் ரூ.550, இறால் கிலோ ரூ.450 முதல் ரூ.550 வரை விற்பனையானது. இதேபோல், நண்டு ரூ.300 முதல் ரூ.400 வரையும், வவ்வால் ரூ. 400 முதல் ரூ.500 வரையும், சிறிய வகை மீன்கள் ரூ.250 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது