Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுச்சேரி அரசு பேருந்துகளில் உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் - இன்று முதல் அமல்

புதுச்சேரி அரசு பேருந்துகளில் உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் – இன்று முதல் அமல்

-

- Advertisement -

புதுச்சேரி அரசு பேருந்துகளில் உயர்த்தப்பட்ட புதிய கட்டணம்; இன்று முதல் அமலுக்கு வந்தது- டீலக்ஸ் பேருந்துகளுக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.a3566e0a204d143a40156e361c87fc5eபுதுச்சேரி மாநில அரசு பேருந்துகளின், 8 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணத்தை உயர்த்தி, கடந்த வாரம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் புதிய கட்டணம் அரசு பேருந்துகளில் அமலுக்கு வந்தது.

அதன்படி புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகளுக்கு 5 ரூபாயும், புதுச்சேரியில் இருந்து காரைக்கால் செல்லும் பேருந்துகளுக்கு 10 ரூபாயும், புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் பேருந்துகளுக்கு 2 ரூபாயும், புதுச்சேரி நகரம் மட்டும் புறநகர்  பகுதியில் ஓடக்கூடிய உள்ளூர் பேருந்துகளுக்கு 3 ரூபாயும் உயர்த்தப்பட்டு உள்ளது.

அதுபோல் டீலக்ஸ் பேருந்துகளான புதுச்சேரியில் இருந்து நாகர்கோவில், மாகி,  திருப்பதி, பெங்களூர் செல்லும் பேருந்துகளுக்கு ரூ‌‌. 10 ரூபாயும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

”மக்களுக்கு சேவை செய்வது தான் கிறிஸ்தவ சமுதாயத்தின் முதன்மை நோக்கம்” – கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த செல்வப்பெருந்தகை

 

MUST READ