Homeசெய்திகள்தமிழ்நாடுபொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்! புதுச்சேரி அரசு அதிரடி

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்! புதுச்சேரி அரசு அதிரடி

-

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்! புதுச்சேரி அரசு அதிரடி

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டார்.

Covid spike: Puducherry makes mask mandatory in public places

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த சில வாரங்களாக கொரோனா ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காரைக்காலில் 3 தினங்களுக்கு முன்பு ஒரு உயிர் பலியாகியுள்ளது. புதுச்சேரியில் தினமும் பரிசோதிக்க கூடிய நோயாளிகளில் 15 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.

எனவே புதுச்சேரி அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மக்கள் அதிகம் கூடும் சன்டே மார்க்கட், கடற்கரை சாலை, மால், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், ஆகிய முக்கிய பொது இடங்களில் கட்டாய முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரிகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு ஏற்கனவே தேர்வு நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன் படி பள்ளிகள் இயங்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை பள்ளிகளில் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் முழுவதும் இந்த உத்தரவு பொருந்தும். தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது” என கூறினார்.

MUST READ