புதுச்சேரி – விழுப்புரம் – நாகை 4 வழிச்சாலையில் ஜனவரி முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ., துாரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு 6,431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. விழுப்புரம் ஜானகிபுரத்தில் துவங்கும் இச்சாலை, புதுச்சேரி மற்றும் கடலுார், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 134 கிராமங்கள் வழியாக அமைகிறது.
இந்த சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டபோது 60 கி.மீ-க்கு சுங்கச்சாலை அமைக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கார், ஜீப், வேன், இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்ல ₹60, ஒரு நாளுக்குள் திரும்ப ₹90, மாத பாஸ் கட்டணமாக ₹1,985-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.