Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுக்கோட்டை, கிருஷ்ணகிரியில் பரவலாக மழை!

புதுக்கோட்டை, கிருஷ்ணகிரியில் பரவலாக மழை!

-

 

இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு..... மீனவர்களுக்கு எச்சரிக்கை!

புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று (பிப்.24) காலை 07.00 மணி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மழை பெய்வதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு… பர்த் மார்க் இயக்குநர் சுவாரஸ்ய தகவல்….

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல், கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பெத்த தாளப்பள்ளி, தின்னகழனி, கங்கலேரி, மாதேப்பட்டி, மூங்கில் புதூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

ஜோஸ்வா இமை போல் காக்க… அதிரடி காதல் கதையாக டிரைலர் ரிலீஸ்…

இதனிடையே, தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று (பிப்.24) காலை 10.00 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

MUST READ