தமிழக மக்களுக்கு பயனுள்ள புதிய திட்டங்கள், சிந்தனைகளை உருவாக்கித் தாருங்கள்” என, மாநில திட்டக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
தமிழக மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது. மக்களுக்கு பயனுள்ள புதிய திட்டங்கள், சிந்தனைகளை உருவாக்கித் தாருங்கள், ஏற்கனவே உள்ள திட்டங்களை இன்னும் மேம்படுத்தவும் ஆலோசனை தாருங்கள். காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்து உள்ளது.எல்லா வளங்களும் இருக்கிறது என்ற நிலையை உருவாக்கி வருகிறோம்.
தமிழக ஆட்சின் திட்டங்கள் ஒவ்வொருவரையும் உயர்த்தி உள்ளது. புதிய திட்டங்களை செயல்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும். மாநில திட்டக்குழு அறிக்கை தான் திமுக., ஆட்சியின் மார்க் ஷீட். கவனம் பெறாத துறைகளை சரி பார்த்து திட்டங்களை தயாரித்து தர வேண்டும்.
ஏற்றத்தாழ்வுகள் என்பது பொருளாதார ரீதியில் மட்டுமல்லாமல் சமூக ரீதியிலும் இருக்கக்கூடாது. பசியில்லை, வறுமையில்லை, பள்ளிகள், குடிநீர் இல்லா இடங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளோம். சாலை, மின்சாரம், பள்ளிகள் இல்லாத இடங்கள் தமிழகத்தில் இல்லை.
தமிழகத்தில் அனைத்து வளங்களும் உள்ளன என்ற நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கிறோம். நிதிவளம் இருக்குமானால் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதால் நிதிவளம் பெருக்க ஆலோசனை தர வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.