Homeசெய்திகள்தமிழ்நாடுசிகிச்சைக்கு பின் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

சிகிச்சைக்கு பின் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

-

- Advertisement -

 

சிகிச்சைக்கு பின் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!
Video Crop Image

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சைப் பின் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14- ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வரும்அக்டோபர் 13- ஆம் தேதி வரை ஏழாவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த அழுத்த பிரச்சனை ஏற்படவே, அவரை பரிசோதித்த சிறை மருத்துவர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து அணி!

இதையடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் ஆன அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.

MUST READ