
ஆம்பூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டது சதியா? என ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“சிவப்பு சிக்னலில் நிற்காமல் சென்றதால் விபத்து”- தென்கிழக்கு ரயில்வே விளக்கம்!
மைசூரில் இருந்து சென்னைக்கு வந்துக் கொண்டிருந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது மோதியுள்ளது. இதையத்து, ரயில் ஓட்டுநர் சாதுரியமாக செயல்பட்டு, ரயிலை நிறுத்தினார். அதைத் தொடர்ந்து, லோகோ பைலட் அருகில் உள்ள ரயிலை நிறுத்தி சோதனை செய்துள்ளார்.
“சந்திராயன்- 3 விண்ணில் ஏவப்படுவது எப்போது?”- இஸ்ரோவின் முக்கிய அறிவிப்பு!
அதன் தொடர்ச்சியாக, இது குறித்து ஜோலார்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அத்துடன், ரயிலைக் கவிப்பதற்கான சதியா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு, ரயில் பயணிகளுடன் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.