- Advertisement -
திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில் ரயில் சக்கரம் தொழிற்சாலை செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கட்டுமான பணியை ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது.
அதிகவேகத்தை தாங்கும் ரயில் சக்கரம் உற்பத்தி தொழிற்சாலை 2026 மார்ச்சில் பயன்பாட்டுக்கு வரும். 80000 சக்கரங்கள் இந்திய ரயில்வேயில் பயன்படுத்தப்பட்டும் எனறும், மீதமுள்ள சக்கரங்கள் உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறினார்.
2 லட்சத்திற்கும் மேற்பட்ட உற்பத்தி திறன் கொண்ட இரும்பு அச்சு முறைகளை கொண்டு உருவாக்கப்படும். ரயில் சக்கரங்களை மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல சிரமம் என்பதால் துறைமுகங்களுக்கு அருகிலேயே தயாரிக்கப்படவுள்ளது என்று கூறினார்.