5 நாட்களுக்கு தொடரும் மழை! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
இன்று திருக்கோவிலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று இடியுடன் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் காலை முதலே கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று மாலையில் சூறை காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ந்தது.
இந்த நிலையில் திருக்கோவிலூர் அதன் சுற்றுவட்டார பகுதியான சந்தைப்பேட்டை, ஆவியூர், குன்னத்தூர்,அரியூர், ரிஷிவந்தியம், மணலூர்பேட்டை, சைலோம், மனம் பூண்டி, அரகண்டநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பலத்த காற்று, இடியுடன் கனமழை பெய்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் சென்னையில் காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலை லேசான மழை பெய்ந்து வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
மேலும், நாளை முதல் வரும் 26ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதனால் அடுத்து வரும் 5 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ந்தது.
இதேபோல் 27 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.