கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, தமிழகத்தின் 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அவசர கடிதம் எழுதியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி!
கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக கடிதம் எழுதியுள்ள தமிழக அரசின் தமிழக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்; மாவட்ட நிர்வாகங்களைத் தயார்படுத்த வேண்டும், எந்த தேவையையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஏழு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.