தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழலில், தொடர் கனமழை காரணமாக, தமிழகத்தின் 8 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் டிச.04 வரை நீட்டிப்பு!
அதன்படி, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தமிழகத்தின் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று (நவ.23) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகள்!
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.23) விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். அதேபோல், உயர் வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.