கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (நவ.04) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, சென்னை, கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், கன்னியாக்குமரி, மதுரை, சிவகங்கை, தேனி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (நவ.04) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
‘நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்’- 128 பேர் உயிரிழப்பு!
கனமழை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக, நீர் நிலைகளுக்கு அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும், நீர் நிலைகளில் குளிக்கவோ, இறங்கவோ வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.