Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரையில் 3வது நாளாக நீடிக்கும் மழை - பொதுமக்கள் அவதி

மதுரையில் 3வது நாளாக நீடிக்கும் மழை – பொதுமக்கள் அவதி

-

- Advertisement -

மதுரையில் மூன்றாவது நாளாக நீடிக்கும் மழையால்  வைகை தரைப்பாலம் சாலையில் மூன்று நாட்களாக தேங்கியுள்ள மழை நீரில் மூழ்கியபடி செல்லும் வாகனங்கள்.

மதுரையில் 3வது நாளாக நீடிக்கும் மழை - பொதுமக்கள் அவதிமதுரை மாவட்டத்தில்  கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து பரவலான மழை பெய்து வரும் நிலையில் சிம்மக்கல் யானைக்கல் சர்வீஸ் சாலை முழுவதிலும் மழை நீரில் மூழ்கியது. இதனால் அந்த சர்வீஸ் சாலை வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் நீரில் மூழ்கியபடி செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது

மதுரையில் 3வது நாளாக நீடிக்கும் மழை - பொதுமக்கள் அவதிமாட்டுத்தாவணி அண்ணாநகர் பகுதியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லக்கூடிய அரசு பேருந்துகளும் சர்வீஸ்சாலை வழியே இயக்கக் கூடிய நிலையில் வாகனங்கள் கடும் நெரிசலில் சிக்கி தவித்துவருகிறது. மேலும் இருசக்கர வாகனங்கள் வெள்ள நீரில் செல்லும்போது மழை நீரில் சிக்கி பழுதாகி நிற்பதால் வாகன ஒட்டிகள் தவித்து வருகின்றனர்.

தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!

வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் சர்வீஸ் சாலைகளில் மழைநீர் தேங்குவதை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை நிரந்தரமாக மேற்கொள்ளாத நிலையில் சிறிய மழைக்கு கூட சர்வீஸ் சாலைகள் முழுவதுமாக நீரில் மூழ்கி விடுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்துவருகின்றனர்.

MUST READ