தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைத் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக, ஏழு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் 19,600 தூய்மைப் பணியாளர்கள்!
அதன்படி, கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.14) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், தஞ்சை மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் இன்று (நவ.14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகா பாரதி உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார்.
ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனை மூட மருத்துவமனை முதல்வர் உத்தரவு!
திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.