Homeசெய்திகள்தமிழ்நாடுஆவடியில் ஒரே இரவில் வற்றிய மழைநீர்; அதிகாரிகளின் துரிதமான நடவடிக்கை

ஆவடியில் ஒரே இரவில் வற்றிய மழைநீர்; அதிகாரிகளின் துரிதமான நடவடிக்கை

-

ஆவடி மாநகராட்சி அதிகாரிகளின் துரித நடவடிக்கைகள் காரணமாக ஆவடி பகுதியில் ஒரே இரவில் மழைநீர் வற்றியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இரு தினங்களாக ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், பட்டாபிராம் பகுதிகளில் ஆங்காங்கே விட்டு விட்டு கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு.சா.மு நாசர், ஆகியோர் களத்தில் இறங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து மழைக்கால நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.

 

மேலும் அதன்படி அதிக அளவில் மழை நீர் தேங்க கூடிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி ராட்சத மின் மோட்டார்கள் கொண்டு நீர் இறைத்து குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழா வண்ணம் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆவடி - 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால் கோரிக்கை

மழைக்காலம் என்றாலே அதிக அளவில் குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழக்கூடிய சில முக்கிய பகுதிகளான கொரட்டூர், அம்பத்தூர், ஆவடி திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் ராட்சத மோட்டார்கள் கொண்டு நீர் இறைத்து மழைநீரை வெளியேற்றி பொதுமக்களுக்கான இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் நடவடிக்கை எடுத்தனர்.

இனிவரும் மழையையும் எதிர்த்து போராடும் வகையில் ஆவடி, மாநகராட்சி செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ