Homeசெய்திகள்தமிழ்நாடுஆ.ராசாவுக்கு சொந்தமான சொத்துகள் கையகம்!

ஆ.ராசாவுக்கு சொந்தமான சொத்துகள் கையகம்!

-

 

A Raja

முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளது.

‘இஸ்லாமிய கைதிகள் விடுதலை’- முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் காரசார வாதம்!

இது தொடர்பாக, அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் படி, முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமான சொத்துச் சேர்த்த வழக்கில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ