Homeசெய்திகள்தமிழ்நாடுராஜேந்திர பாலாஜி ஊழல் வழக்கு…ஆளுநர் இன்னும் அனுமதி வழங்கவில்லை - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

ராஜேந்திர பாலாஜி ஊழல் வழக்கு…ஆளுநர் இன்னும் அனுமதி வழங்கவில்லை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

-

- Advertisement -

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஊழல் வழக்கை விசாரிக்க தமிழ்நாடு ஆளுநர் இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராஜேந்திர பாலாஜி ஊழல் வழக்கு…ஆளுநர் இன்னும் அனுமதி வழங்கவில்லை - உச்ச நீதிமன்றம் அறிவிப்புகடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக கே.டி. ராஜேந்திர பாலாஜி இருந்தார். இவர் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 33 பேரிடம் 3 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக  புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த வழக்கு  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பங்கஜ் மிட்டல் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமைத்த ஆனந்த் திவாரி, ராஜேந்திர பாலாஜி மீதான குற்றப் பத்திரிகை கடந்த நவம்பர் மாதமே  தயாராகிவிட்டது. ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி ஆளுநருக்கு கடந்த 2024 பிப்ரவரி 4ம் தேதி கோப்புகள் அனுப்பபட்டது, ஆனால் ஆளுநர் இதுவரை  அனுமதி கொடுக்கவில்லை. எனவே அனுமதிக்காக தற்போதும்  காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் :-

இதற்கு முன்னர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம் என கூறினீர்கள். மேலும் ஆளுநரிடம் இந்த ஒப்புதல் பெற என்ன முயற்சி எடுத்தீர்கள் ? என வினவினர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு,

தமிழகத்தில் இருக்கும். பிரச்சனையை கூற இயலாது, குறிப்பாக ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக தான் எதுவும் விவரிக்க இயலாத சூழலில் உள்ளோம். ஏனெனில் ஆளுநரின் நடவடிக்கை அனைவருக்கும் தெரிந்ததே, அதனை தற்போது விரிவாக கூற இயலாது என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து  இந்த வழக்கை (மார்ச் 7ம் தேதிக்கு) ஒரு வாரத்திற்கு நீதிபதிகள  ஒத்திவைத்தனர். அப்போது குறுக்கிட்ட ராஜேந்திர பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் கிரி, தற்போதைய நிலையில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற   ஆணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரினார். அதற்கு நீதிபதிபகள், தற்போது மேல்முறையீட்டு வழக்கை விசரணைக்கு எடுக்கவில்லை என தெரிவித்தனர்

MUST READ