Homeசெய்திகள்தமிழ்நாடு"மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்"- நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!

“மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்”- நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!

-

 

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்டூடியோவில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, நடிகர் மாரிமுத்துவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவராகவே வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து, சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் மாரிமுத்து மறைவு : சசிகலா, ஓபிஎஸ் இரங்கல்..

பின்னர் இன்று மாலை 03.00 மணிக்கு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், வருசநாடு அடுத்த பசுமலைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. இந்தநிலையில் மாரிமுத்துவின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும் ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்த வேண்டும்.

அந்த வகையில், நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், “மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ