Homeசெய்திகள்தமிழ்நாடுநடிகர் ரஜினிகாந்துக்கு ஐ.சி.சி.யின் கோல்டன் டிக்கெட்!

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐ.சி.சி.யின் கோல்டன் டிக்கெட்!

-

 

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐ.சி.சி.யின் கோல்டன் டிக்கெட்!
Photo: BCCI

உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளைக் காண்பதற்கான கோல்டன் டிக்கெட், பி.சி.சி.ஐ.யின் கௌரவச் செயலாளர் ஜெய்ஷாவால் வழங்கப்பட்டது.

விஜயுடன் இணையும் அரவிந்த் சுவாமி….. ‘தளபதி 68’ குறித்த அப்டேட்!

கோல்டன் டிக்கெட் வழங்கியதற்கான பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். ஐ.சி.சி.யின் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளைக் கண்டுகளித்து இவர் சிறப்பிக்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளைப் பிரபலப்படுத்தும் நோக்கில் முக்கிய பிரமுகர்களுக்கு ஐ.சி.சி. கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுடன் போட்டியைக் காண வருபவர்களுக்கு வி.ஐ.பி.க்கான மரியாதையும், உபசரிப்பும் வழங்கப்படும் என்று குறிப்பிடத்தக்கது.

என் உயிர் தோழன் பாபுவின் மறைவு…. இரங்கல் தெரிவித்த பாரதிராஜா!

இதனிடையே, மும்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆகியோருக்கும் கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

MUST READ