Homeசெய்திகள்தமிழ்நாடுமீண்டும் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் எல்.முருகன்!

மீண்டும் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் எல்.முருகன்!

-

 

மீண்டும் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் எல்.முருகன்!

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்.

இயக்குநர் பாக்யராஜின் குற்றச்சாட்டும், காவல்துறையின் விளக்கமும்!

மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க.வின் தேசிய தலைமை வெளியிட்டுள்ளது. மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிஷா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார். அதேபோல், மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீண்டும் மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்.

மாநிலங்களவைத் தேர்தலில் எல்.முருகன் போட்டியின்றித் தேர்வாக உள்ள நிலையில், தொடர்ந்து தனது மத்திய இணையமைச்சர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்படுகிறது.

“உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல்?”- முரசொலி!

மாநிலங்களவைக்கு வருக பிப்ரவரி 27- ஆம் தேதி தேர்தலும், அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ