Homeசெய்திகள்தமிழ்நாடுராமதாஸ் உடன் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பு!

ராமதாஸ் உடன் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பு!

-

- Advertisement -

 

ராமதாஸ் உடன் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பு!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீரென நேரில் சந்தித்துப் பேசினார்.

விஷ்ணு விஷால், அருண் ராஜா காமராஜ் கூட்டணியின் புதிய படம்……. ஷூட்டிங் எப்போது?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், மாநில, தேசிய அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு புறம், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸை, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் நேரில் சந்தித்துப் பேசினார்.

தள்ளிப் போகும் ‘தனி ஒருவன் 2’ படப்பிடிப்பு …… அப்செட்டில் மோகன் ராஜா!

இந்த சந்திப்பின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைய வேண்டும் என்றும், தொகுதி ஒதுக்கீடு குறித்தும் இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

MUST READ