Homeசெய்திகள்தமிழ்நாடுபிறை தெரிந்தது....தொடங்கியது ரமலான் நோன்பு!

பிறை தெரிந்தது….தொடங்கியது ரமலான் நோன்பு!

-

 

பிறை தெரிந்தது....தொடங்கியது ரமலான் நோன்பு!

தமிழகத்தில் ரமலான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில், இஸ்லாமியர்கள் தங்களின் வீடுகள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தினமும் காலையில இட்லி, தோசைன்னு செய்யாமல் இது ஒரு தடவை செஞ்சு பாருங்க!

இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படை கடமைகளில் ரமலான் நோன்பும் ஒன்று. ரமலான் பண்டிகைக்கு முன்பாக, இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்புக் கடைப்பிடிப்பது வழக்கம். நோன்பு காலத்தில் விடியலுக்கு முந்தைய உணவைச் சாப்பிட்ட பிறகு சூரியன் மறையும் வரை தண்ணீர் உட்பட எதுவும் உன்னாமல் இருப்பார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரமலான் மாதம் தொடங்கும். அந்த வகையில், தமிழகத்தில் பிறை தென்பட்டதால் நோன்பு காலம் தொடங்குவதாக தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். நடப்பாண்டில் இன்று முதல் ஏப்ரல் 10- ஆம் தேதி வரை நோன்பு கடைப்பிடிக்கப்படவுள்ளது. இந்த காலக்கட்டத்தில் இறைவனை வணங்கி, பசியை உணர்ந்து ஏழைகளுக்கு தானம் செய்து உதவுவதே நோன்பு பெருநாளைக் கடைப்பிடிக்கும் முறை என்கின்றனர் இஸ்லாமியர்கள்.

சிவப்பு கொய்யாவின் சிறப்பு பலன்கள்!

ரமலான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில், நாகை மாவட்டம், நாகூர் தர்காவில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

MUST READ