Homeசெய்திகள்தமிழ்நாடுராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு!

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு!

-

- Advertisement -

 

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு!

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி வெகு விமர்சையாக மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

லவ் இருக்கா? இல்லையா? அதிதி ராவ் – சித்தார்த் ஜோடியிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்…

அயோத்தியில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினியிடம் நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் தென்பாரத அமைப்பாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் நடிகர் ரஜினியிடம் நேரில் அழைப்பிதழ் வழங்கினர்.

இதனிடையே, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், வெளி மாநில சுற்றுலாப் பயணிகளும் அயோத்திக்கு வந்து செல்லும் வகையில், மத்திய அரசின் சார்பில் அயோத்தியில் பன்னாட்டு விமான நிலையமும், புனரமைக்கப்பட்ட ரயில் நிலையமும், புதிய வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தொடங்கி வைத்தார்.

சலார் திரைப்பட வெற்றி… நடிகர் பிரபாஸ் ரசிகர்களுக்கு நன்றி…

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, அயோத்தி முழுவதும் காவல்துறையினர், தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், கும்பாபிஷேகத்தில் பிரதமர் உள்ளிட்டோர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில், உச்சக்கட்டப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அதே சமயம், அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கு தேவையான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

MUST READ